20 ஆயிரம் ரூபாய் தரலன்னா பழத்தை பறிமுதல் செய்வீங்களா.. கேட்கல.. இன்னும் சத்தமா கதறு..! உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவம்
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள பழக்கடை ஒன்றில் அதிகாரிகள் ஹிமாச்சல் ஆப்பிள் பெட்டியில் இருந்து அழுகிய பழங்களை பறிமுதல் செய்ததால் ஆத்திரம் அடைந்த கடைக்காரர், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு தான் கொடுக்காததால் சோதனை நடப்பதாக குற்றஞ்சாட்டிய நிலையில் அவரது மிரட்டலுக்கு அஞ்சாமல் அதிகாரிகள் அழுகிய பழங்களை கைப்பற்றி அழித்தனர்
ஹிமாச்சலில் இருந்து வருவதாக குறிபிடப்பட்டுள்ள ஆப்பிள் பெட்டியை திறந்து அழுகிய பழங்களை அள்ளிய ஆத்திரத்தில் கடைக்காரர் காண்டான காட்சிகள் தான் இவை..!
தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள பழக்கடை ஒன்றில் ஆய்வுக்கு சென்ற தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ராகவன் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைக்கு உரிமம் பெறப்பட்டுள்ளதா என கேட்க, உரிமையாளர் என்பதை கூட சொல்லாமல் காலம் தாழ்த்தினர்
உரிமையாளர் வந்ததும் அவர் முன்பாக, அங்கிருந்த ஹிமாச்சல் ஆப்பிள் என்ற ஆச்சிடப்பட்ட பெட்டிகளை திறந்து ஆய்வு செய்தனர். அதற்குள் இருந்து அழுகிய ஆப்பிள் பழங்களை கைப்பற்றினர்
ஒவ்வொரு பெட்டியிலும் 2 கிலோ அளவுக்கு ஆப்பிள் பழம் அழுகி இருந்த நிலையில் கடைக்காரர் ஆவேசமாகி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் வாக்குவாதம் செய்தார், 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாகவும் தான் கொடுக்க மறுத்ததால் தான் விற்பனைக்கு வைத்திருந்த ஆப்பிள் பெட்டிகளை ஆய்வு என்ற பெயரில் நாசம் செய்வதாக சத்தம் போட்டார்.
அதிகாரிகள் பயந்து சென்று விடுவர் என்று கடைக்காரர் எண்ணிய நிலையில் உடனடியாக அங்கு பாதுகாப்புக்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் முன்னிலையில் ஒரு பெட்டிக்குள் இருந்து அழுகி விணாய்போன ஆப்பிள் பழங்களை கைப்பற்றிய அதிகாரிகள் இதனை பறிமுதல் செய்ய வேண்டுமா ? வேண்டாமா ? என்று எடுத்து காண்பித்ததால் கடைக்காரர் சைலண்டு மோடுக்கு சென்றார்
அதனை தொடர்ந்து மீட் அண்ட் ஈட் என்ற உணவகத்தின் ப்ரீசரில் இருந்து காலாவதியான சிக்கன் வகைகளையும், குப்பூஸ் களையும், பன்களையும், கைப்பற்றினர்
கிலோ கணக்கில் கெட்டுப்போன சிக்கனை பறிமுதல் செய்து குப்பை வண்டியில் கொட்டினர்
உணவுப்பொருள் பாதுகாப்புத்துறையினர் சுழற்சி முறையில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவு பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
Comments