மதுரை கணவன் இறந்த துக்கத்தில் 5 மாத கர்ப்பிணி தனது 2 வயது மகளை கிணற்றில் தள்ளி விட்டு தற்கொலை

0 2760

மதுரை அருகே கணவன் இறந்த துக்கத்தில் 5 மாத கர்ப்பிணி தனது 2 வயது மகளை கிணற்றில் தள்ளி விட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன் விவேக் அவருக்கு 2 வயது குழந்தை உள்ள நிலையில் மனைவி ஷாலினி 5 மாத கர்ப்பமாக இருந்தார்.

ஒரு வாரத்திற்கு முன்பு மகள் விசாகாவிற்கு 2-வது பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தடபுடலாக பிரியாணி உள்ளிட்ட உணவுகள் வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது.

அன்று இரவே விவேக்கிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4 நாட்கள் தீவிர சிகிச்சையிலிருந்து சிகிச்சை பலனின்றி விவேக் உயிர் இழந்ததாக சொல்லப்படுகிறது.

கணவன் இறந்த சோகத்திலிருந்த ஷாலினி மகளை கிணற்றில் தள்ளி விட்டு தானும் குதித்த நிலையில், சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஷாலினி உடலை மீட்ட தீயணைப்பு துறையினர், நீரை மோட்டார் மூலமாக வெளியேற்றி குழந்தையை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மகன், மருமகள் அடுத்தடுத்து இறந்த சோகத்தில் ரவிச்சந்திரன் தூக்க மாத்திரையை சாப்பிட்டதால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments