கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி கொடூர கும்பலிடம் சிக்கிய இளம் பெண்! 2 நாட்கள் சிறை வைத்து சித்ரவதை!!

0 2915

புதுச்சேரியில் அக்கா வீட்டில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண்ணை தங்க இடம் கொடுப்பதாக கூறி 2 நாட்கள் தனி வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்த 3பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரியை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவர் புதுச்சேரி திப்புராயப்பேட்டை பகுதியில் வசிக்கும் தனது சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார்.

2 நாட்களுக்கு முன்னர் தனது சகோதரியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே புறப்பட்ட அவர், தனது தாயார் வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறி புதிய பேருந்து நிலையம் சென்றுள்ளார்.

ஆனால் ஊருக்கு செல்ல கையில் பணம் இல்லாததால் எங்கு செல்வது என தெரியாமல் அந்த பெண் குழம்பியுள்ளார். அந்த பெண்ணின் மனநிலையை அறிந்து கொண்ட ஆட்டோ ஓட்டுனர் அவரை அங்கிருந்து முதலியார்பேட்டை அனிதாநகர் பெட்ரோல் நிலையம் அருகே அழைத்து வந்து, அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அந்த பெண் சத்தம் போடவே, பயந்து போன ஆட்டோ ஓட்டுனர் அந்த பெண்ணை அங்கேயே இறக்கி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

தனியாக நின்றிருந்த அந்த பெண்ணை அங்கிருந்த 3 பேர் நைசாக பேசி, அந்த பெண்ணுக்கு தங்க இடம் கொடுப்பதாக கூறி, அனிதா நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு அந்த பெண்ணுக்கு 3 பேரும் பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் 2 நாட்கள் அந்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த நிலையில் மூன்று பேரும் வெளியே சென்றபோது அந்த இளம்பெண் அங்கிருந்து தப்பித்து அருகில் உள்ள கடைக்கு வந்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு தொடர்ந்து நடத்திய விசாரணையில் இளம் பெண்ணை கடத்தி சென்று வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்த அதே பகுதியை சேர்ந்த சாதிக்பாட்ஷா, தினேஷ், அரவிந்தன் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இளம்பெண்ணை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுனரை முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். அதிக குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இளம்பெண்ணை இரண்டு நாட்கள் தனி வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments