கோடை வெயிலால் ஆஸ்திரேலியாவில் புதர்த்தீ 24 மணி நேரத்தில் 42,000 ஏக்கர் நிலங்கள் சேதம்

0 984

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்ட புதர்த்தீ, பலத்த காற்றால் மளமளவென பரவி 24 மணி நேரத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கபளீகரம் செய்துள்ளது.

ஒரே இரவில் 3 மடங்கு வேகமாக புதர்த்தீ பரவத்தொடங்கியதால் அருகாமையில் வசித்த பலர் வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் 650 பேர் நெருப்பை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். அப்பகுதிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் அது தீ பரவலை கட்டுப்படுத்த உதவும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments