மக்கள் தொகைக்கு ஏற்ப உரிமைகளை வழங்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்
மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்தார்.
விரைவில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜக்தால்பூரில் பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிரதமர், நாட்டின் வளங்களை அனுபவிக்கும் முதல் உரிமை சிறுபான்மையினருக்குத் தான் உண்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதை சுட்டிக்காட்டினார்.
இப்போது பெரும்பான்மையினருக்கு ஆதரவாக பேசுவதன் மூலம் சிறுபான்மையினரின் உரிமைகள் குறைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, ஜக்தால்பூரில் புதிய இரும்பு ஆலைக்கான அடிக்கல் உட்பட 27 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியான தரோக்கி மற்றும் ராய்ப்பூர் இடையே ரயில் சேவையை அவர் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.
Comments