கிருஷ்ணகிரில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுறுப்புகள் தானம் உடலுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
மூளைச்சாவு அடைந்ததால், உடலுறுப்புகளை தானமாக அளிக்கப்பட்ட இளைஞரின் உடலுக்கு தருமபுரியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கோத்தகோட்டா கிராமத்தை சேர்ந்த 40 வயதான கோவிந்தராஜ் விபத்தில் படுகாயம் அடைந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவர் மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க உறவினர்கள் முன்வந்தனர்.
இதனையடுத்து, இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் ஆகியவை சேலம், கோவை, தருமபுரி அரசு மருத்துவமனைகளுக்கும், சென்னை மற்றும் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் தானமாக அளிக்கப்பட்டன.
இதனை அடுத்து பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்து அமரர் ஊர்திக்கு எடுத்துச் சென்றது வரை, சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு இருபுறமும், அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அதேபோல் பயின்று வருகின்ற மருத்துவ, செவிலிய மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று கோவிந்தராஜனின் உடலுக்கு மலர் தூவி மரியாதை செய்து, வழி அனுப்பி வைத்தனர்.
Comments