சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை வெளிட்டது பீகார் அரசு
சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை பீகார் அரசு வெளியிட்டுள்ளது.
இதில் ஒருங்கிணைந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 63 விழுக்காடு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி தினமான நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 13.07 கோடிக்கு சற்று அதிகமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36.01 விழுக்காடு இருப்பதாகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.12 விழுக்காடு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பொதுப் பிரிவு மக்கள் தொகையில் 15.52 விழுக்காடு என்றும், பட்டியலின மக்கள் 19.65 விழுக்காடு மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் 1.68 விழுக்காடு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments