விழுப்புரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞரை கொலை செய்ய முயன்ற 6 பேர் கைது

0 1334

விழுப்புரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞரை கொலை செய்ய முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கண்டம்பாக்கத்தை சேர்ந்த அப்பு என்கிற பரணிதரன் மற்றும் அவரது நண்பர்  பிரசாந்த்  ஆகியோர் நேற்று முன்தினம் மாலை அங்குள்ள ரயில் நிலைய நடைமேடையில் படுத்திருந்த போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ரவுடியான நாராயணசாமி என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டை வீசியதாக கூறப்படுகிறது. இதில் பரணிதரன் பலத்த காயத்துடனும், பிரசாந்த் லேசான காயத்துடனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி சம்பவம்  நடந்திருப்பது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் தலைமறைவாக இருக்கும் நாராயணசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments