தேர்தல் வாக்குறுதிகளாக சொன்னதை செய்யாமல் மின்கட்டண உயர்வு போன்ற சொல்லாதவற்றை செய்கிறது தி.மு.க - சீமான்
போராடும் ஆசிரியர்கள், செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நிதிப் பற்றாக்குறை என்று கூறும் தமிழக அரசுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவது, நினைவிடம் அமைப்பது உள்ளிட்டவற்றுக்கான நிதி எங்கிருந்து வந்தது என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தேர்தல் வாக்குறுதியாக சொன்னதைச் செய்யாத தி.மு.க. அரசு, மின் கட்டண உயர்வு, ஊழல் போன்ற சொல்லாத விஷயங்களை செய்து வருவதாக கூறியுள்ளார்.
முன்னதாக, சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் பேட்டியளித்த சீமான், காவிரி விவகாரம் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இல்லை என்றால் நான் ஏற்படுத்துவேன் எனவும் தெரிவித்துள்ளார். இந்தியர் என்கிற உணர்வுடன் காவிரியில் தண்ணீர் தர வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார் என்றால் திராவிடர் உணர்வு செத்து போய் விட்டதா? என கேள்வி எழுப்பினார்.
Comments