காவிரி விவகாரத்தில் திமுக அரசு தும்பை விட்டு வாலைப் பிடிப்பதாக இ.பி.எஸ். கண்டனம்
விவசாயிகள் மீது இனிமேலாவது அக்கறை கொண்டு, காவிரி பிரச்சனை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் மீது முதலமைச்சருக்கு அக்கறை இருந்திருந்தால், கர்நாடக காங்கிரஸ் அரசின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டபோது, அவர்களுடன் நட்பாக பேசி தண்ணீரை திறந்தவிடச் செய்திருக்கலாம் என்றும் இண்டியா கூட்டணிக் கூட்டத்தின்போது, கர்நாடகா அரசு தண்ணீரைத் திறந்தால் தான் கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்ற நிபந்தனை விதித்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவில் தங்கள் குடும்ப நபர்கள் நடத்தும் தொழில்கள் பாதிக்கக்கூடாது என்ற நோக்கில், காவிரி பிரச்சனையில் கர்நாடக அரசுக்கு வக்காலத்து வாங்குவதைத் தவிர்த்து, தி.மு.க. அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
Comments