மாம்பழ ஜூஸ் கம்பெனிகளில் இருந்து கொட்டப்பட்ட ரசாயன மாங்கொட்டைகளால் தண்ணீர் மாசடைந்து உள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு
திருப்பத்தூர் அருகே மாங்குப்பம் கிராமத்தில் மாம்பழ ஜூஸ் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இருந்து ரசாயனம் கலந்த மாங்கொட்டைகளை கொட்டுவதால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து, தண்ணீர் மாசடைந்து உள்ளதாக பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
மானவள்ளி மற்றும் கரியம்பட்டி பகுதியில் செயல்படும் இரண்டு தொழிற்சாலைகள், நில உரிமையாளர்களின் ஒப்புதலோடு மாங்கொட்டைகளை கொட்டுவதாக கூறப்படுகிறது.
மாங்கொட்டைகள் மழைநீரில் ஊறி அதிலிருந்து வெளியேறிய இரசாயனத்தால் தண்ணீர் கறுப்பு நிறத்தில் மாறியுள்ளதோடு, 24 மணி நேரமும் துர்நாற்றமும் வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Comments