இந்தியா உடனான உறவை மேலும் வலுப்படுத்த முயற்சித்துவருகிறோம் : கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

0 1594

இந்தியா உடனான உறவை வலுப்படுத்த முயற்சித்துவருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அண்மையில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்திய உளவுத்துறையை தொடர்பு படுத்தி ஜஸ்டின் ட்ரூடோ பேசியதால் கனடா உடனான உறவில் விரிசல் ஏற்பட்டு, அந்நாட்டினருக்கு விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்திவைத்தது.

மான்ரியல் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, உலகரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்துவருவதாகவும், வளர்ந்துவரும் பொருளாதார சக்தியான இந்தியாவுடன் நெருக்கமான உறவை வைத்துகொள்ளவே தமது அரசு விரும்புவதாகவும் தெரிவித்தார்.

அதே சமயம் ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் உண்மையை வெளிக்கொணர இந்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments