உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுவரை இல்லாத அளவில் முதலீடுகள் ஈர்க்கப்படும் - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகம் இதுவரை காணாத அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியிலிருந்து சென்னை, திருச்சி, ஈரோடு, காஞ்சிபுரம், திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு புதிய பேருந்து வழித்தடத்தில் பேருந்துகளை தொடங்கி வைத்து அதில் அவர் பயணம் செய்தார்.
மன்னார்குடி பகுதியில் கனிக்கர் இனத்தை சேர்ந்த 8 நபர்களுக்கு சாதி சான்றிதழ்களை டி.ஆர்.பி. ராஜா வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பசுமை தொழில்நுட்பத்தை நோக்கி தமிழகம் நகர்ந்து வருவதால், டீசலுக்கு மாற்றாக எலக்ட்ரிக் பேருந்துகளை கொண்டுவர நடடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
தமிழக இளைஞர்கள் மற்றும் பெண்களின் திறமைக்கு ஏற்ப வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நிறுவனங்கள் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழில்பேட்டை அமைக்க, மக்கள் நிலங்களை கொடுக்க முன் வந்தால் அரசு வாங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.
Comments