திருச்சி கடலை மிட்டாய் தொழிற்சாலைக்கு பெயின்ட் அடித்துக் கொண்டிருந்த பட்டதாரி இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

0 1651

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கட்டடத்தில் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்த பட்டதாரி இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

பி.காம் பட்டதாரியான காளிப்பட்டியை சேர்ந்த கார்த்திக் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்ததால் கிடைக்கும் வேலைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் கீரம்பூர் சாலையில் உள்ள கடலை மிட்டாய் தொழிற்சாலையில் பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக சென்றுள்ளனர்.

கட்டடத்தில் மேல் பகுதியில் கார்த்திக் பெயிண்ட் அடிக்கும் பொழுது கட்டடத்தில் அருகிலேயே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் தவறி விழுந்ததாக தெரிகிறது.

கருகிய நிலையில், கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த கார்த்திக் சடலத்தை மீட்டு, தொழிற்சாலையின் உரிமையாளர் நாகராஜன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments