மணிப்பூரில் முதல்வர் பிரேன்சிங்கின் வீட்டைத் தாக்க முயன்றவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடிப்பு

0 2302

மணிப்பூரில் முதல்வர் பிரேன்சிங்கின் வீட்டைத் தாக்க முயன்றவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர். மெய்த்தி இனத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களின் மரணத்தால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

இம்பால் அருகே உள்ள ஹெய்ங்காங் பகுதியில் முதலமைச்சர் பிரேன்சிங்கின் பூர்வீக வீட்டைத் தாக்க ஒரு கும்பல் முயன்றதாகக் கூறப்படுகிறது. வீட்டுக்கு அருகில் வந்த போராட்டக்காரர்கள் டயர்களை தீயிட்டு எரித்தனர்.

கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாததால், இறுதியில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கலவரக் கும்பலை விரட்டினர்.

முதல்வரின் வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments