பவானி ஆற்று நீரை சட்டவிரோதமாக உறிஞ்சும் ஆலைகளுக்கான மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்: விவசாயிகள்
மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், கோபி, பவானி நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சிகளின் கழிவுகள், மருத்துவமனை கழிவுகள், சாய ஆலை கழிவுகள் பவானி ஆற்றில் நேரிடையாக கலந்து விஷமாக்குவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரேடு மாவட்டம் கோபிச் செட்டிபாளையத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்குப் பின் பேட்டியளித்த கொடிவேரி அணை, தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசன சபை நிர்வாகிகள், கழிவுகள் கலந்திருப்பதால் பவானி ஆற்று பாசனம் கடுமையாக பாதிக்கப்பட்டு நிலமும் மாசு அடைந்து வருவதாக கூறியுள்ளனர்.
விவசாயம் செய்யும் போர்வையில் பவானிசாகரில் இருந்து பவானி வரை 46 ஆலைகள் ராட்சத மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீரை திருடி வருவதாக தெரிவித்துள்ள விவசாயிகள், மாவட்ட நிர்வாகம் ஆயக்கட்டு மற்றும் குடிநீருக்கு முக்கியத்துவம் அளித்து தண்ணீர் திருட்டை தடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
Comments