வேளாண்மை, மற்றும் இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தையுமான பிரபல விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் காலமானார்.
கும்பகோணத்தில் 1925ஆம் ஆண்டு பிறந்த எம்.எஸ்.சுவாமிநாதன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணியாற்றிய எம்.எஸ்.சுவாமிநாதன், அரிசித் தட்டுப்பாட்டைப் போக்க நவீன அறிவியல் முறைகளை கையாண்டவர்.
வயது மூப்பால் எம்.எஸ். சுவாமிநாதன் அவரது இல்லத்தில் காலமானார். தங்களது தந்தை வாழ்நாள் முழுவதும் மருத்துவமனை சென்றதே இல்லை என சுவாமிநாதனின் மகள் செளமியா சாமிநாதன் கூறியுள்ளார்.
அதிக விளைச்சல் திறனுடன், நோய் தாக்குதல்கள் அற்ற அரிசி வகைகளை உருவாக்கிய சுவாமிநாதன், உருளைக்கிழங்கு, கோதுமை, அரிசி மற்றும் கதிர்வீச்சு தாவரவியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டவர்.
பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் தலைமை வகித்துள்ள சுவாமிநாதன், க்வாஷ் மாநாடுகள் மற்றும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டங்களையும் வழங்கியுள்ளன.
Comments