உதகை அரசு கலைக்கல்லூரி விடுதியில் தங்குவதற்காக மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக முதல்வர் மற்றும் பேராசிரியர் பணியிடை நீக்கம்
விடுதியில் தங்குவதற்காக மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வரும் பேராசிரியர் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உதகை அரசு கலைக்கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனி தலா 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிவிட்டுத்தான் தங்க அனுமதிக்கிறார் என்றும் மாணவர்களுக்காக அரசு தரும் சலுகைகளையும் கையூட்டு பெற்றுக்கொண்டே செய்து தருகிறார் என்றும் தொடர் புகார்கள் எழுந்தன.
இதேபோல் தாவரவியல் இணை பேராசிரியரான ரவி என்பவர் துறை மாறுதல் கேட்கும் மாணவர்களிடம் லஞ்சம் வாங்குவதாகவும் புகார் எழுந்த நிலையில், இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சென்னை கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Comments