"நாளை முதல் ரூ.2000 நோட்டுகளை வாங்க மாட்டோம்" - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம்
பெட்ரோல் பங்குகளில் நாளை முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படாது என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியாது என ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில் பெட்ரோல் பங்குகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படுவது இன்றுடன் நிறுத்திக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30-ம் தேதி முதல் தொடர் விடுமுறை வருவதால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கி கணக்கில் செலுத்த முடியாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது.
Comments