பாதுகாப்பு ஊழியரை கடித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு நாய்

0 1763

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு நாயான கமாண்டர், அதிபரின் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரை கடித்துள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகைக்குக் கொண்டுவரப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாயான கமாண்டர், வெள்ளை மாளிகை ஊழியரைக் கடித்திருப்பது இது 11-ஆவது முறையாகும்.

இச்சம்பவம் திங்கள்கிழமை காலை நடைபெற்றதாகவும், கடிபட்ட ஊழியருக்கு வெள்ளை மாளிகையிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அதிபரின் பாதுகாப்புப் படை தலைவர் ஆண்டனி குக்லீன்மி தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையின் சூழலுக்கு ஏற்ப கமாண்டரைப் பழக்கப்படுத்தி வருவதாக அதிபரின் மனைவி ஜில் பைடன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments