சென்னையில் 11 வயது சிறுமி தற்கொலையை சந்தேகத்துக்கு இடமான மரணம் என போலீஸ் வழக்குப்பதிவு

0 2605

சென்னையில் ஒரே வாரத்தில் மூன்றாவது சம்பவமாக பதின்வயது சிறுமி ஒருத்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்த மூர்த்தி - ஏகவல்லி தம்பதியின் மகளான 11 வயது சிறுமி, ஆர்.கே. சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.

வீட்டில் நேற்று இரவு எட்டரை மணி வாக்கில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழிட்டு அந்தச் சிறுமி சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

நன்றாக படிக்கின்ற மாணவியான தனது மகள் நான்கு முறை விளையாட்டுப் போட்டிகளில் மெடல் வாங்கி இருப்பதாக கூறிக் கதறிய சிறுமியின் தாயார், சிறுமியின் தற்கொலை முடிவுக்கு யார் காரணம் என காவல் துறையினர் தான் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் இறப்பு குறித்து சந்தேகத்திற்கு இடமான மரணம் என ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஒரே வாரத்தில் நடிகர் விஜய் ஆண்டனியின் 16 வயது மகள், அயன்வரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஆகியோரைத் தொடர்ந்து தற்போது ராயப்பேட்டையில் இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments