லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?

0 3171

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடப்பதாக இருந்த லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் அழுத்தங்கள் காரணமில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் அறிவித்துள்ள நிலையில் காவிரி நீர் விவகாரத்தால் கர்நாடகாவில் லியோ படம் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது

நாங்கள் வரவா.. என்று லியோ ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வழிமேல் விழிவைத்து காத்திருந்த விஜய் ரசிகர்களை வரவேண்டாம் என்று சொல்லி இருக்கின்றது லியோ படக்குழு..! நேரு உள்விளையாட்டரங்கில் நடக்க இருந்த ஆடியோ வெளியீட்டு விழா ரத்தானதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இல்லை என்று கூறப்பட்ட நிலையில் சென்னை பெரு நகர காவல்துறை பாதுகாப்பு வழங்க இயலாது என்று மறுத்ததால் தன், ஆடியோ வெளியிட்டு விழா ரத்தானதாக கூறப்படுகின்றது.

லியோ இசை வெளியீட்டு விழாவில் 6 ஆயிரம் பேர் பங்கேற்பதாக படக்குழு காவல்துறையிடம் அனுமதி கேட்டு கோரிக்கை மனு வழங்கியது. காவல்துறையினரின் உளவுப்பிரிவு தகவல்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதுமிருந்து வரவழைக்கப்பட உள்ளதாகவும் , 50 ஆயிரம் பேரை திரட்ட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து போலீசார் இசை வெளியிடீட்டு விழாவில் 2000 பேர் மட்டுமே பங்கேற்பதாக இருந்தால் அனுமதி வழங்குவதாக கூறி செக் வைத்துள்ளது. 6 ஆயிரம் இருக்கைகள் கொண்ட அரங்கில் 2 ஆயிரம் பேருக்கு மட்டும் பாஸ் வழங்கி நிகழ்ச்சி நடத்தினால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து விடுவார்கள் என்பதறக்காக நிகழ்ச்சியையே மொத்தமாக ரத்து செய்ததாக கூறப்படுகின்றது.

மேலும் அண்மையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி போல லியோ விழாவிலும் குளறுபடி நேர்ந்தால் நகரின் முக்கிய பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து விடும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதற்கிடையே தமிழகத்திற்கு காவிரி நீர் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் வலுத்து வரும் நிலையில் அங்குள்ள திரையரங்குகளில் விஜய்யின் லியோ படத்தை வெளியிட இயலாத சூழ் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லியோ ஆடியோ வெளியீட்டு விழா தான் இல்லை, அதிகலையில் முதல் காட்சியாவாது கொண்டாடி தீர்க்கவும் என்ற ரசிகர்களின் ஆவலுக்கும் தடை போடப்பட்டுள்ளது. அதன் படி லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்குத்தான் வெளியிடப்படும் என்று கூறப்படுகின்றது இதையடுத்து we stand with leo என்ற வாசகம் எக்ஸ் தளத்தில் டிரெண்டாகி வருகின்றது.

இந்த நிலையில் லியோ ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்தது ஏன் ? என்று கேள்வி எழுப்பி உள்ள நாம் தமிழர் கட்சிட்யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜெயிலர் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு பாதுகாப்பு வழங்கிய காவல்துறை, லியோவுக்கு பாதுகாப்பு வழங்க இயலாதா ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments