இலங்கையில் தமிழக மீனவர்கள் 17 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

0 987

இலங்கையில் தமிழக மீனவர்கள் 17 பேருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை 10 வருடத்திற்கு ஒத்திவைத்து நிபந்தனையுடன் மீனவர்களை விடுதலை செய்தது.

ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 17 மீனவர்கள், கடந்த 13-ம் தேதி 3 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அன்று இரவே, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

அவர்கள் அனைவரும் கடந்த 14-ம் தேதி இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்தது, கடல் வளத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில், 17 மீனவர்களுக்கும் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்த நீதிமன்றம், தண்டனையை 10 வருடத்திற்கு ஒத்திவைத்து நிபந்தனையுடன் மீனவர்களை விடுதலை செய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments