மனைவியை ரயில் முன் தள்ளி கொல்வதற்காக இழுத்துச் சென்ற கணவன்... உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிள்.

0 3245

ஆந்திராவில் குடிபோதையில் மனைவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற கணவனிடமிருந்து காவலர் ஒருவர் அப்பெண்ணை போராடி காப்பாற்றினார்.

ஏலூரூ மாவட்டம் வட்லூரு அருகே குடிகாரன் ஒருவன் தனது மனைவியை ஒரு கையில் பிடித்துக் கொண்டும் மறுகையில் பிளேடு ஒன்றை வைத்து கொண்டும் ரயில்வே ட்ராக் மீது நடந்து சென்று கொண்டிருந்தான்.

பெண்ணின் கை அறுபட்டு ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் இதனைப் பார்த்து அப்பெண்ணை காப்பாற்ற ஓடினார்.

அருகில் வந்தால் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்துவிடுவேன் என அவன் மிரட்டவே, நீண்ட நேரம் போராடிய காவலர், வேறு வழியின்றி அவனை எட்டி உதைத்து கீழே தள்ளி பெண்ணை காப்பாற்றினார்.

இந்த களேபரம் நடந்துகொண்டிருந்தபோது தூரத்தில் ரயிலும் வந்துகொண்டிருந்த நிலையில், பிளேடுடன் தப்ப முயன்ற கணவனை பொதுமக்கள் உதவியுடன் காவலர் மடக்கிப் பிடித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments