கல்லூரி வாகனமா ? காதல் வாகனமா? தம்பி உனக்கென்ன வேலை எழுந்திரு..! அக்கறையுடன் எச்சரித்த பெண் எஸ்.ஐ

0 2414

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் மகளிர் கல்லூரி வழியாக செல்லும் அரசு பேருந்தில் ஏறி ஜோடி, ஜோடியாக அமர்ந்து கொண்டு சக பயணிகளுக்கு இடையூறு செய்த புள்ளிங்கோ இளைஞர்களையும் இளம் பெண்களையும் போக்குவர்த்து சிறப்பு காவல் பெண் உதவி ஆய்வாளர் எச்சரித்த சம்பவம் அரங்கேறி உள்ளது

கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுடன் ஜோடியாக அமர்ந்து காதல் அட்டாகாசம் செய்த புள்ளிங்கோ இளைஞர்களை எச்சரிக்கும் காட்சிகள் தான் இவை..!

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து மகளிர் கல்லூரி வழியாக செல்லும் அரசு பேருந்தில் முன் கூட்டியே ஏறி ஜோடியாக அமர்ந்து கொண்டு புள்ளிங்கோ இளைஞர்கள் காதல் விளையாட்டுகளில் ஈடுபடுவதாகவும், இந்த காதல் ஜோடிகளால் பல்வேறு தொல்லைகளும், தொந்தரவுகளும் இருந்து வருவதாக அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரூபியிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து புறப்பட தயாரான சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் ஏறிய எஸ்.ஐ ரூபியை கண்டதும் உள்ளே இருந்தவர்கள் கப் சிப் என்று அமர்ந்திருந்தனர் , எவையெல்லாம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்று குறிப்பிட்டதோடு, மாணவியுடன் ஜோடியாக அமர்ந்திருந்த ஒரு புள்ளிங்கோவை அதட்டி எழுப்பி விட்டார்

படிக்கும் மாணவ பருவத்தில் படிக்க மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். படித்து நல்ல வேலையில் சேர வேண்டும் என்றும் காதலால் இழந்தது ஒரு போதும் திரும்பக்கிடைக்காது என்று அறிவுறுத்திய எஸ்.ஐ ரூபி, பின் சீட்டில் மாணவிகளுடன் அமர்ந்திருந்த இளைஞர்களையும் , மாணவிகளையும் எச்சரித்ததோடு இது கல்லூரி வாகனமா ? அல்லது காதல் வாகனமா ? என்று ஆதங்கப்பட்டார்

இளமையில் கல்லூரியில் படிக்காததால், தான் இன்று வரை சிறப்பு உதவி ஆய்வாளராக பணி செய்வதாகவும், தன்னுடன் கல்லூரி படித்தவர்கள் உயர் அதிகாரிகளாக சென்றுவிட்டார்கள் என்ற எஸ்.எஸ்.ஐ ரூபி, நீங்கள் உங்கள் வாழ்க்கையை வீணாக்காதீர்கள் என்றார். உங்கள் பெற்றோர் உங்கள் நலனுக்காக உழைக்கிறார்கள். அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் மறுபடியும் ஒரு நாள் திடீரென்று இந்த பேருந்தில் ஏறுவேன் அப்போது உங்கள் அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டு கல்லூரிகளில் ஒப்படைப்பேன் என்று எச்சரித்துவிட்டு இறங்கிச்சென்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments