தவறான சிகிச்சையில் சிசு உயிரிழப்புக்கு காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் : பாதிக்கப்பட்டவருக்கு 6 வாரத்திற்குள் இழப்பீடாக வழங்கவும் திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
பிரசவத்தின்போது தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்.
என ஊத்துக்கோட்டையில் உள்ள ஜூலியா மருத்துவமனைக்கு திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஊத்துக்கோட்டையில் உள்ள ஜூலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமேஷ் என்பவரின் மனைவி திவ்யாவுக்கு வலிப்பு வந்த நிலையில், மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்களே பிரசவம் பார்த்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காமேஷ் வழக்கு தொடர்ந்த நிலையில், இழப்பீட்டு தொகையுடன் சேர்த்து மருத்துவமனை பரிசோதனைக்காக வசூலிக்கப்பட்ட 15 ஆயிரம் ரூபாய் மற்றும் வழக்கு செலவு 10 ஆயிரம் ரூபாயை சேர்த்து ஆறு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments