டூவீலருக்கு டிரைவர் வச்சிகிரேன்.. ஜாமீன் தாங்க மை லார்டு... TTF வாசன் அடித்த ஸ்டண்ட்..! திருக்குறளால் திருப்பி அடித்த சம்பவம்

0 3865

இனி இரு சக்கரவாகனம் ஓட்டுவதற்கு டிரைவர் வைத்துக் கொள்வதாக கூறி டிடிஎப் வாசன் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்ட நிலையில், திருக்குறளை சுட்டிக்காட்டி அறிவுரை வழங்கிய நீதிபதி அளித்த திடீர் உத்தரவால் டிடிஎப் வாசன் தரப்பு அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது

இரு சக்கரவாகனத்தை ஒரு சக்கரத்தில் ஓட்ட முயன்றதால் சாலையோரம் தூக்கி வீசப்பட்டு, உடலில் காயங்களோடு, போலீசில் வழக்கும் வாங்கி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் பைக் யூடியூப்பர் டி.டிஎப் வாசன்..!

ஏற்கனவே அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்கிழமை 2 வது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி செம்மல், முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

TTF வாசன் தரப்பு வழக்கறிஞர் வெங்கட்ராமன் ஆஜராகி, வாசனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். வாசனுக்கு கைகள் உடைந்து இன்னும் அறுவை சிகிச்சை கூட மேற்கொள்ளவில்லை. அவர் வெளியே வந்தால் வாகனத்தை தொட மாட்டார். ஏற்கனவே நாங்கள் லைசன்ஸ் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்.

அவருக்கு தமிழ்நாடு முழுவதும் நிறைய பாலோயர்ஸ் இருக்கிறார்கள் அவர் இனி இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டுமென்றால் கூட ஒரு டிரைவர் வைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். நூதன தண்டனை ஏதாவது கொடுத்தால் கூட நாங்கள் பெற்றுக் கொள்கிறோம் என கோரிக்கை வைத்தார்.

சுமார் 40 லட்சம் பாலோவர்ஸ்கள் TTF வாசனுக்கு இருக்கிறார்கள் என்றும் பல்வேறு இடங்களில் TTF வாசன் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறிய அரசு தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன், பொது இடத்தில் கூட பிறரை அச்சுறுத்தும் வகையில் வாசன் வாகனத்தை இயக்குகிறார். இவருக்கு ஜாமீன் வழங்கினால் தவறான முன் உதாரணமாக அமையும். யார் வேண்டுமென்றாலும் வாகனத்தை, எப்படி வேண்டுமானாலும், இயக்கிவிட்டு ஜாமீனில் வெளி வந்துவிடலாம் என கமெண்ட் செய்வார்கள் என கூறி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்

இருத்தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விபத்துக்குள்ளான வாகனம் குறித்து கேட்டறிந்தார். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனமா ? அல்லது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனமா ? என கேட்டார். இதனை அடுத்து போக்குவரத்து புலனாய்வு செய்யப்பட்டுள்ளதா? எனவும் கேள்வியை எழுப்பிய அவர், உடனடியாக போக்குவரத்து புலனாய்வு பணியை முடிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

போக்குவரத்து துறை அறிக்கை வந்த பின் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறி ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் , ' அஞ்சுவது அஞ்சாமை பேதமை ' என்ற திருகுறளுக்கு இணங்க சாகசம் செய்பவர்கள் பொது இடத்தில் சாகசம் செய்யக்கூடாது. அப்படி செய்வது உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

அத்தோடு வாசன் பயன்படுத்திய வெளிநாட்டு பொருட்களுக்கு உரிய அனுமதி இருக்கிறதா ? என்பது குறித்தும் விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டார். இதனை கேட்ட டிடிஎப் வாசனின் ஆதரவாளர்கள் அதிர்ந்து போயினர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments