அமெரிக்காவில் கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதை தாயார் தெரிந்துகொள்ளக் கூடாது என்பற்காக கத்தியால் குத்தி கொலை செய்த மகள்

0 2121

அமெரிக்காவில், தாயாரை கத்தியால் 30 முறை குத்தி படுகொலை செய்த வழக்கில், மகள் மனநல பாதிப்பால் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2020ம் ஆண்டு மார்ச் மாதம், மருத்துவ பணியாளரான பிரென்டா-வை அவரது மகள் சிட்னி, இரும்பு தவாவால் அடித்தும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்தார்.

கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதை தாயார் தெரிந்துகொள்ளக்கூடாது என நினைத்த சிட்னி, கல்லூரி அதிகாரிகளை தனது தாயார் அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போது கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது வழக்கறிஞர்கள் வாதாடினர். ஆனால், இரும்பு தவாவால் தாக்கி உயிர் போகாததால் சமையலறைக்கு சென்று கத்தியை எடுத்துவந்து சிட்னி கொலை செய்ததை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், மனநல பிறழ்வு உள்ளவர் அப்படிச் செய்ய வாய்ப்பில்லை என தெரிவித்து அவர் கொலையாளி என தீர்ப்பளித்தது.

சிட்னிக்கு வியாழனன்று தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments