திருவாரூர் ஆறுகளில் கூடுதல் தண்ணீர் திறந்தால் மட்டுமே பயிர்களைக் காப்பாற்ற முடியும் விவசாயிகள் கோரிக்கை

0 892

திருவாரூர் மாவட்டத்தில் அரிச்சந்திரபுரம், திட்டச்சேரி, கருப்பூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் சுமார் பத்தாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 74 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், வெள்ளையாறு மற்றும் வெண்ணாற்றில் மூன்று முறை மட்டுமே அதுவும் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே வந்ததால், விவசாய நிலத்துக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், 50 நாட்கள் ஆன நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. விவசாய நிலங்கள் முழுவதும் பாலம் பாலமாக வெடித்துக் காணப்படுவதால், உடனடியாக பாசன ஆறுகளில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு, நிலங்களுக்குப் பாய்ச்சினால் மட்டுமே பயிர்களைக் காப்பாற்ற முடியும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பல இடங்களில் பயிர்கள் முழுவதுமாகக் கருகிவிட்டதாகவும், அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments