செப்.30-க்குள் சொத்து வரியைச் செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.. அக்.1 முதல் ஒரு சதவீத வட்டி வசூலிக்கப்படும் எனவும் எச்சரிக்கை.. !!
நடப்பு முதல் அரை நிதியாண்டுக்கான சொத்துவரியை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அக்டோபர் 1 முதல் கூடுதலாக ஒரு சதவீத வட்டியுடன் சொத்து வரியைச் செலுத்த வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.
இந்த வருவாய் மூலம், அடிப்படைக் கட்டமைப்புகள், சுகாதார தூய்மைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சொத்து வரியை இ-சேவை மையங்கள், மாநகராட்சி இணையதளம், சென்னை செயலி மூலமாகவும் செலுத்தலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான முதல் அரை ஆண்டில் இதுவரை 650 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலானதைவிட 90 கோடி ரூபாய் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.5 லட்சம் பேர் இன்னும் சொத்து வரி செலுத்தவில்லை என்றும், 5 நாட்களே மீதமுள்ள நிலையில் அனைவரும் சொத்து வரி செலுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
Comments