மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, இந்தியாவின் மிகப்பெரிய சாதனை: பிரதமர் மோடி
இன்று நமது தேசம் வரலாற்று சாதனைகளை படைத்து வருவதோடு, பல முக்கிய முடிவுகளையும் எடுத்து வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றுவதற்கான பணியாணைகளை காணொலி மூலம் வழங்கிப் பேசிய பிரதமர்,
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்பது தேசத்தின் மிகப்பெரிய சாதனை என்றார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து நாட்டின் புதிய எதிர்காலம் தொடங்கியுள்ளதாகக் கூறிய பிரதமர், பெண்களுக்கு புதிய கதவுகளைத் திறப்பதுதான் அரசின் கொள்கை என்றும் கூறினார்.
நம் நாடு புதிய உச்சங்களை எட்டி வருவதாகக் கூறிய பிரதமர், விரைவில் உலகளவில் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும் என்றார்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பம் எல்லாவற்றையும் சுலபமாக்கி இருப்பதாகவும், தொழில்நுட்பம் காரணமாக ஊழல் குறைந்திருக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.
Comments