காதுகேளாத பெண் வழக்கறிஞர் சைகை மொழியைப் பயன்படுத்தி வாதாடிய வழக்கை முதன்முறையாக விசாரித்த உச்ச நீதிமன்றம்.. !!
காதுகேளாத வழக்கறிஞர் ஒருவர் சைகை மொழியைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்பாளர் மூலம் வாதாடிய வழக்கை உச்ச நீதிமன்றம் முதன்முறையாக விசாரித்தது.
காது கேளாத பெண் வழக்கறிஞர் சாரா சன்னி சைகை மொழியில் வழக்காட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் அனுமதி அளித்தார்.
நீதிமன்ற வழக்காடல்களில் அனைத்துமே உரத்த குரலில் பேசப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
வழக்கில் ஆஜரான சாரா, மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்தி சைகை மொழியில் வாதிட்டார். மொழிபெயர்ப்பாளரின் வேகத்தையும் தலைமை நீதிபதி பாராட்டினார்.
Comments