மீண்டும் கொரோனா போல் கொடிய தொற்றுநோய் பரவும் வாய்ப்பு அதிகம் - சீனாவின் 'பேட் உமன்' ஷீ ஜென்க்லீ எச்சரிக்கை
சீனாவில் சார்ஸ் போன்ற தொற்று நோய் பேரிடருக்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக அந்நாட்டின் Bat Woman என்றழைக்கப்படும் தொற்றுநோய் நிபுணர் ஷீ ஜென்க்லீ ( Shi Zenghli ) கூறியுள்ளார்.
வௌவால்கள் மூலம் கோவிட் போன்ற பெருந்தொற்று வேகமாகப் பரவக்கூடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வூகான் தொற்று நோய் ஆய்வகமும் ஷீயின் குழுவினரும் கூட்டாக நடத்திய ஆய்வில் 40 வகையான கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் இருப்பதாகவும் அதில் பாதிக்கும்மேல் மிகவும் ஆபத்தானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
அவற்றில் மூன்றுவகை மீண்டும் பரவி ஆபத்தை விளைவிக்கும் என்றும் மீண்டும் கொரோனா போன்ற பேரிடருக்கு வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாகவும் தொற்றுநோய் நிபுணர்க்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் வேறு சில தொற்று நோய் நிபுணர்கள் மூன்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் வைரஸ் பரவும் என்பதை ஏற்கவில்லை. மக்களின் பாதுகாப்பு உணர்வே எதிர்காலத்தில் இதுபோன்ற வைரஸ் பரவலைத் தவிர்த்து விடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்
Comments