காவிரியில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் குறுவை சாகுபடியை சமாளிக்கலாம் - அமைச்சர் துரைமுருகன்
காவிரியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் குறுவை சாகுபடியை சமாளிக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக கூறினார்.
கர்நாடகாவில் விவசாயிகளின் போராட்டத்தை அம்மாநில அரசாங்கம் தான் சமாளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments