திருச்சியில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து ரவுடிகளுக்கு சப்ளை செய்த இருவர் கைது
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து ரவுடிகளுக்கு விநியோகம் செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
தாயனூர் பகுதியில் நாட்டுவெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சென்ற போலீசார், சிவசக்தி, கர்ணன் என இருவரை கைது செய்தனர்.
நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து விற்றதுடன், ரௌடிகளை அழைத்து வந்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயிற்சி அளித்ததும் தெரியவந்தது. கைதானவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகள், கத்தி, அரிவாள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
Comments