அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் முதலை ஒன்றின் வாயில் சிக்கிய பெண் சடலமாக மீட்பு..!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் முதலை ஒன்றின் வாயில் சிக்கிய பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பின்னெலஸ் கவுன்டி என்னும் இடத்தில் உள்ள கால்வாய்க்குள் இருந்த முதலை ஒன்று பெண் ஒருவரை தனது தாடையில் வைத்து இருப்பதை கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு புகார் அளித்தனர் இதைத்தொடர்ந்து அங்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் அந்த முதலையை கருணை அடிப்படையில் கொன்று பின்னர் பெண்ணின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முதலை இறந்த பின்னர் தாடையில் இருந்த பெண் சடலத்துடன் வனத்துறையினர் மீட்டு சென்றனர்.
Comments