பூமியைத் தாக்கும் என கருதப்படும் பென்னு சிறுகோள்... உட்டா பாலைவனத்தில் தரை இறக்கிய நாசா விஞ்சானிகள்
பூமியைத் தாக்கும் அபாயம் உள்ளதாக கணிக்கப்பட்ட பென்னு என்ற சிறுகோளின் மாதிரியை சேகரித்துள்ள நாசா விண்கலம் உட்டா பாலைவனத்தில் தரை இறங்கியது .
500 மீட்டர் விட்டம் கொண்ட பென்னு சிறுகோள், 22-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பூமி மீது மோதி பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக 1999-ம் ஆண்டு நாசா கணித்தது.
இதற்காக சிறுகோளை ஆராய ஒசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலம் 2016-ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
இந்த விண்கலம் 2 ஆண்டுகளில் 2 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்து 2018ம் ஆண்டு டிசம்பரில் பென்னுவை நெருங்கியது.
தனது இயந்திர கைகளால், சிறு கோளிலிருந்து 60 கிராம் முதல் 2 கிலோ வரையிலான மாதிரிகளை தன்னிடமிருந்த கேப்ஸ்யூலில் சேமித்துக்கொண்டது.
முழு பணியையும் 2020ம் ஆண்டு நிறைவு செய்த ஓசிரிஸ் ரெக்ஸ், சேகரித்த மாதிரியுடன் பூமியை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்த விண்கலம் வளி மண்டலத்தை கடந்து பூமிக்குள் வந்தவுடன், சிறு கோளின் மாதிரி சேமிக்கப்பட்டுள்ள கேப்ஸ்யூல் விண்கலத்திலிருந்து பிரிந்து, பாராஷூட் மூலம் உட்டா பாலைவனத்தில் தரை இறங்கியது .
Comments