இந்தியாவில் 5 மடங்கு உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் தங்களின் உற்பத்தியை 5 மடங்கு அதிகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐபோன்களை உற்பத்தி செய்யும் ஆப்பிள் நிறுவனம், அடுத்த ஆண்டு முதல் ஏர் பாட்களை தயாரிக்க விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
40 பில்லியன் டாலர் மதிப்பில் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ள ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் iPadகள் அல்லது அதன் மடிக்கணினிகளை உருவாக்க உடனடித் திட்டம் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது.
தற்போது இந்தியாவில் இருந்து மொபைல் போன்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் மாறியுள்ள நிலையில், ஐபோன் 15 சீரிஸின் விற்பனை, ஐபோன் 14 தொடருடன் ஒப்பிடும்போது 100 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments