மலையாளத்தில் 19 படங்களை இயக்கிய இயக்குனர் கே.ஜி. ஜார்ஜ் முதியோர் இல்லத்தில் காலமானார்

0 1786

லேகாயுண்டே மரணம் போன்ற புகழ்மிக்க மலையாளப்படங்களை இயக்கியவரான கே.ஜி.ஜார்ஜ் முதுமை காரணமாக கொச்சியில் நேற்று காலமானார்.

அவருக்கு வயது 77.முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த அவர் தமது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டார்.

மலையாள சினிமாவின் மிக உயரிய விருதான கே.சி.டேனியல் விருதை ஜார்ஜூக்கு கேரள அரசு அளித்தது.இயக்குனர் ராமு கரியத்திடம் உதவி இயக்குனராக தனது திரையுலக வாழ்வை தொடங்கிய கே.ஜி. ஜார்ஜ் 20 ஆண்டுகள் காலத்தில் சுமார் 19 படங்கள் இயக்கியுள்ளார்.

கே.ஜி.ஜார்ஜின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெற உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments