இந்தியர்களின் உற்சாகம் இரட்டிப்பாகியுள்ளது - பிரதமர் மோடி
சந்திரயான்-3 மற்றும் ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றி, இந்தியர்களின் உற்சாகத்தை இரட்டிப்பாக்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று வானொலி மூலம் உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இஸ்ரோ நடத்தும் சந்திரயான்-3 மெகா விநாடி வினா போட்டியில் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஜி20 உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தட ஒப்பந்தம், உலக வர்த்தகத்தின் அடிப்படையாக மாறும் என்றும், இத்திட்டம் இந்தியாவின் கற்பனையில் உதித்தது என்றும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். ஜி20 உறுப்பு நாடுகளில் ஆப்பிரிக்க யூனியனை இணைத்ததில், இந்தியாவின் தலைமைத்துவம் வெளிப்பட்டதாக கூறினார்.
மத்திய அரசின் முயற்சியால், ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதன் மற்றும் கர்நாடகாவின் ஒய்சாலா கோயில்கள், உலக பாரம்பரிய தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உரையின் முடிவில், பண்டிகைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், மக்கள் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
Comments