பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை : ஜெயக்குமார்
பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்ற அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாவட்டச் செயலாளர் கூட்டம் இருப்பதால் கூட்டணி குறித்து எவ்வித கருத்தும் தற்போது தெரிவிக்க முடியாது என்றும் கட்சித் தலைவர்கள் எடுக்கும் முடிவுகள் முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தமிழக மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்காகவே அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் டெல்லி சென்றிருந்ததாகவும் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
Comments