9 வந்தே பாரத் ரயில்களின் சேவையை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.. !!
நாடு முழுவதும் 11 மாநிலங்களை இணைக்கும் 9 வந்தே பாரத் ரயில்களின் சேவையை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலுங்கானா, பீகார், ஒடிசா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையேயான வந்தே பாரத் ரயில், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோல், சென்னை சென்ட்ரல் - ஆந்திராவின் விஜயவாடா இடையே இயக்கப்படும் ரயில் ரேனிக்குண்டா, நெல்லூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.
முன்னதாக காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் அனைத்து பகுதிகளையும் வந்தே பாரத் ரயில்கள் இணைக்கும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை என்றார்.
மேலும், வந்தே பாரத் ரயில்களின் புகழ் மக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், ஏற்கனவே ஒரு கோடியே 11 லட்சம் பேர் பேர் பயணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments