கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதற்கு தீர்வு காணப்பட வேண்டும் - அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

0 982

வெளிநாடுகளில், பாதாள சாக்கடைகளில் ஏற்படும் பழுதுகள் வரைபடத்தின் அடிப்படையில் இயந்திரம் மூலமாக சரிசெய்யப்படும் நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் வரைபடம் இல்லாததால் அப்பணிகளை செய்ய முடியவில்லை என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றுவதற்காக மதுரை மாநகராட்சிக்கு 30 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன இயந்திரத்தை தனியார் நிறுவனம் தானமாக வழங்கியது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாதாள சாக்கடையில் மனிதர்களை இறக்கக் கூடாது என விதிமுறைகள் இருந்தும், அவசரத்திற்காக தவறான வழியில் மனிதர்கள் இறக்கி விடப்படுவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments