ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை வகித்தது சவாலான பணியாக இருந்தது - அமைச்சர் ஜெய்சங்கர்
ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை வகித்தது சவாலான பணியாக இருந்ததாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள அவர், இந்தியா- ஐநா குளோபல் சவுத் கூட்டத்தில் உரையாற்றினார்.
ஜி20 அமைப்பில் கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே இடைவெளி அதிகமாக இருந்ததாகவும், வடக்கு தெற்கு நாடுகளிடையே பூகோளப் பிரிவினைகள் இருந்ததாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
குளோபல் சவுத் அமைப்பில் இடம்பெற்றுள்ள 125 நாடுகளின் பிரதிநிதியாக இந்தியா வளர்ச்சியை முன்வைத்து ஜி 20 மாநாட்டை நடத்தியதாகவும் கூறினார்.
முன்னதாக எகிப்து, சைப்ரஸ்,கினியா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளின் அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Comments