3 நாட்களில் முடிந்த திருமண வாழ்க்கை மணப்பெண் செய்தது என்ன ? படுக்கை அறையில் மாப்பிள்ளை பகீர் முடிவு

0 6501

செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்தில் திருமணமான 3-வது நாளில் மாப்பிள்ளை படுக்கை அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில், கொலை செய்யப்பட்டுவிட்டதாக கூறி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமணம் முடிந்த கையோடு போட்டோஷூட்டுக்கு ஆடிக்கொண்டிருக்கும் இந்த ஜோடிகளின் வாழ்க்கையில் தான் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

திருமணமான 3 வது நாளே படுக்கை அறையில் மாப்பிள்ளை மர்மமான முறையில் உயிரிழந்ததால் உறவினர்கள் நீதி கேட்டு காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

இராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த மஞ்சுநாதன் - ராணி தம்பதியின் மகனான சரவணன். செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்தை சேர்ந்த உறவினர் வீட்டில் ஒரு வருடமாக தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்த நிலையில் உறவினர் மகளான சுவேதாவை இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து மாமியார் வீட்டில் விருந்துக்காக தங்கியிருந்த நிலையில், மூன்றாவது நாளே வீட்டு படுக்கையறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சரவணன் சடலமாக கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணன் உயிரிழப்பை சந்தேக மரண வழக்காக பதிவு செய்தனர்.

பிணக்கூறாய்வுக்கு பின்னர் சடலத்தை பெற்றுக்கொண்டு தங்களது சொந்த ஊரான ராணிப்பேட்டையில் அடக்கம் செய்தநிலையில், சரவணனின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் சரவணனின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சரவணன் திருமணம் செய்து கொண்ட மணப்பெண் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றதாகவும், சுவேதாவின் விருப்பமில்லாமல் தாயின் கட்டாயத்தின் பேரில் இந்த திருமணம் நடந்ததாகவும் குற்றஞ்சாட்டினர்.

ஒரகடத்தில் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்த சரவணன் ஒரு வருடமாக தனது சம்பளம் முழுவதையும் சுவேதாவின் வீட்டில்தான் கொடுத்ததாகவும், தன் மகன் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழையில்லை. இது முற்றிலும் திட்டமிட்ட கொலை.. என சந்தேகமடைகிறோம். எனது மகனின் சாவில் மர்மம் இருக்கிறது. என் மகனின் சாவில் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று புகார் தெரிவித்தனர்

ஒரு கட்டத்தில் நியாயம் கேட்டு செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தை முற்றுகையிட்டு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் போலீசாருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

காவல் ஆய்வாளர் புகழேந்தி உறுதியளித்ததின் பெயரில் அனைவரும் கலைந்து சென்றனர். போலீசார் மணப்பெண் சுவேதாவிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் தெரியவந்தது. சரவணன் தூக்கிட்டு கொண்ட அன்று பகல் முழுவதும் மகாபலிபுரத்தில் சுற்றிவிட்டு வீட்டு வந்ததாகவும், 3 வது நாளும் சரவணனை தன்னிடம் நெருங்க சுவேதா அனுமதிக்காததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தூங்க சென்ற பின்னர் சரவணன் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறி உள்ளார். சுவேதாவிடம் இருந்து செல்போனை போலீசார் கைப்பற்றிய நிலையில், தனக்கு பாஸ்வேர்டு மறந்து போய்விட்டதாக கூறி போலீஸ் விசரணைக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளார். இதையடுத்து சுவேதாவிடம் திங்கட்கிழமை மீண்டும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

செல்போனை ஆய்வு செய்தால் சரவணனின் உயிரிழப்புக்கான காரணாம் தெரியவரும் என்கின்றனர் காவல்துறையினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments