பிரேசிலில் குளிர்காலம் என்ற போதிலும் காலநிலை மாற்றத்தால் அதீத வெப்பத்தை சமாளிக்க நீர் நிலைகளை நாடும் மக்கள்
பிரேசிலில் தற்போது குளிர்காலம் என்ற போதிலும், காலநிலை மாற்றத்தால் அதீத வெப்பம் வாட்டி வருகிறது. வெப்பத்தை சமாளிக்க மக்கள் நீர் நிலைகளை நாடி செல்கின்றனர்.
தலைநகர் சாவ் பாலோவில் நீச்சல் குளங்கள், செயற்கை நீரூற்றுகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதனிடையே ரியோ டி ஜெனிரோ நகர மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகள் வெயிலை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விலங்குகளின் தங்கும் இடங்களை குளிர்ச்சியாக வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு குளிர்ச்சியான உணவுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
சிங்கம், கருஞ்சிறுத்தை உள்ளிட்டவற்றுக்கு மாமிசங்கள் சேர்த்தும், யானை, குரங்கு உள்ளிட்டவற்றுக்கு பழங்கள் சேர்த்தும் தயாரிக்கப்படும் பனிக்கட்டி உணவுகள் வழங்கப்படுகின்றன.
Comments