முக்கிய உடலுறுப்புகளை தானம் பெறுவதற்காக தமிழகத்தில் 6,811 பேர் பதிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
முக்கிய உடலுறுப்புகளை தானம் பெறுவதற்காக தமிழகத்தில் 6 ஆயிரத்து 811 பேர் பதிவு செய்து காத்திருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் சார்பாக "உறுப்பு தான தினம்" நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில்
2008 ஆம் ஆண்டில் விபத்தில் மூளைச் சாவடைந்த ஹிதேந்திரனின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்க ஒப்புக் கொண்ட அவரது பெற்றோர் கவுரவிக்கப்பட்டனர்.
ஹிதேந்திரன் உயிரிழந்த தினமே தமிழகத்தில் உடல் உறுப்பு தான தினமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சிக்கு பிறகு பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உறுப்பு தானத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
Comments