திருப்பூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிருப்பதாகக் கூறி வீரபாண்டியில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் கட்டணம் மற்றும் நூல் விலை உயர்வால் பனியன் மற்றும் விசைத்தறி தொழில்கள் நலிவடைந்திருப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் கைவிடக் கூடாது என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
Comments