புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோயில்களில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோயிலில் மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள், நெய் தீபம் ஏற்றியும், பெருமாள் பாதங்களில் உப்பை கொட்டியும் வழிபட்டு, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கடலுரை அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோயிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருக ஒப்பிலியப்பன் கோயிலில் அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள், புஷ்ப அங்கியில் அருள்பாலிக்கும் மூலவரையும், விசேஷ அலங்காரத்தில் உள்ள உற்சவர் எண்ணப்பர், ஸ்ரீதேவி, பூமிதேவியும் தரிசித்து வருகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
தென்திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் அதிகாலை நடைபெற்ற திருமஞ்சனம் மற்றும் சிறப்புப் பூஜைகளை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
Comments