மத்திய அரசு திட்டங்களில் ஊழல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 2-வது வீடியோ பதிவு வெளியீடு
மத்திய அரசின் அயோத்யா திட்டம் முதல் ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரை அனைத்திலும் ஊழல் நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கையை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவுக்காக பேசுகிறேன் என்ற தலைப்பிலான பாட்காஸ்ட் தொடரில் முதலமைச்சரின் 2-வது வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 2014, 2019 நாடாளுமன்ற தேர்தல்களைப் போல் 2024 தேர்தலிலும் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ராமாயணம் நடந்ததாகக் கூறப்படும் மாநிலங்களுக்கு எல்லாம் பயணிகளை அழைத்துச் செல்லும் அயோத்யா திட்டம், ஏழைகளும் விமானத்தில் பயணிக்க நடுத்தர நகரங்களிலும் விமான நிலையம் அமைக்கப்போவதாக தொடங்கப்பட்ட உடான் திட்டம், நாடு முழுவதுமுள்ள சாலைகளை இணைக்க கொண்டுவரப்பட்ட பாரத்மாலா திட்டம், ஏழைக் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்குவதாக தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. அளவிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுகுறித்து பிரதமரோ, சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களோ ஏன் பதில் சொல்லவில்லை என்றும், ஏன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Comments